இறால் வறுவல்
தேவையானபொருட்கள்:
இறால் – 1/4 கிலோ
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
முட்டை – 1
சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
இறாலின் தோலை முழுவதும் உரிக்கவும்.சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூளை போட்டு பிரட்டவும். அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், உப்பு சிறிதளவு சோளமாவு சேர்த்து பிரட்டி வைக்கவும். முட்டையை நன்கு நுரை வரும் வரை அடித்து கொள்ளவும். 1மணிநேரம் வைத்திருந்து பின் ஒவ்வொரு இறாலையும் முட்டையில் நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.













